பிரித்தானியா இஸ்ரேலுக்கு ஆப்பு இனி ஆயுதங்கள் வழங்கக் கூடாது என ரிஷி சுண்ணக் முடிவு !

பிரித்தானியா இஸ்ரேலுக்கு ஆப்பு இனி ஆயுதங்கள் வழங்கக் கூடாது என ரிஷி சுண்ணக் முடிவு !

World Central Kitchen” என்ற தொண்டு நிறுவனம் உலகில் சில பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அவர்கள் காஸா பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார்கள். இவர்கள் உணவுகளை எடுத்துக்கொண்டு காரில் சென்றவேளை, இந்த வாகன தொடர் அணியை குறிவைத்த இஸ்ரேல் விமானப்படை. தனது ஆளில்லா விமானத்தைப் பாவித்து பல ஏவுகணைகளை அந்தா கார்கள் மீது ஏவி தாக்கியுள்ளார்கள்.

காரின் மேல் புறம், மற்றும் பக்க வாட்டில் என்று எல்லாப் பகுதிகளிலும் தாம் தொண்டு நிறுவனம் என்ற ஸ்டிக்கரை அவர்கள் அடித்து ஒட்டியுள்ளார்கள். இதனால் ஆளில்லா விமானத்தில் உள்ள மிக மிக துல்லியமான கமரா ஊடாக அதனை இஸ்ரேல் ராணுவம் பாத்து இருக்கும். இருந்தாலும் பாலஸ்தீன மக்களுக்கு உணவு சென்று சேரக் கூடாது என்ற நோக்கத்திலேயே இஸ்ரேல் இப்படியான ஒரு மிகவும் கேவலமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதில் 7 பேர் பலியாகியுள்ள நிலையில்.

இதில் 3 பேர் பிரித்தானியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுண்ணாக், இஸ்ரேல் பிரதமரிடம் விளக்கம் கேட்டார். 24 மணி நேரம் ஆகியும் இஸ்ரேல் எந்த ஒரு பதிலையும் வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரிஷி, இஸ்ரேலுக்கு பிரிட்டன் வழங்கி வரும் ஆயுத உதவிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து பல உலக நாடுகள், இஸ்ரேல் இது தொடர்பாக விளக்கம் தரவேண்டும் என்று கோரியுள்ளதோடு. ஐ.நா மனித உரிமை சபையில் இது தொடர்பான பிரேரணை ஒன்றை முன்வைக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.