அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ இயக்குநர் நியமிப்பு விஷயமாக அமெரிக்க செனட் அவை கூட்டத்தில் பேசப்பட்டது. அப்போது, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின்
இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை நியமனம் செய்ய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.செனட் அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காஷ் படேலின் நியமனத்துக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 49 வாக்குகள் பதிவானது. இதைத் தொடர்ந்து, எஃப்பிஐ-யின் இயக்குநராக காஷ் படேலின் நியமனத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
எஃப்பிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டது குறித்து காஷ் வெளியிட்ட பதிவில், தன்மீது நம்பிக்கை வைத்த டிரம்புக்கு நன்றி. எஃப்பிஐ மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டெழுப்புவேன் என்று தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் பேசுகையில், “ அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன். அமெரிக்காவுக்கு எதிராக இந்த கிரகத்தின் ஒவ்வொரு மூளையில் இருப்பவர்களையும் வேட்டையாடுவோம்” என கூறினார். .
.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் காஷ் படேல் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.