தமிழ் நாடு புதுக்கோட்டையை சேர்ந்த, சித்திரகுமார் – ஜீவிதா தம்பதியினருக்கு , மணிகண்டன்(18) மற்றும் மகள் பவித்ரா, 16 என்று 2 பிள்ளைகள் இருந்துள்ளார்கள். மணிகண்டன் ஐ.டி.ஐ., படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.
மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த பவித்ரா, பெற்றோர் கண்டித்தும் மொபைல் போனில் மூழ்கி கிடந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு அவர், மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்த போது, தங்கையிடம் இருந்த போனை பறித்து, துாங்க செல்லுமாறு மணிகண்டன் அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால், போனை திருப்பிக் கேட்டு சண்டையிட்டதால், மணிகண்டன் தரையில் வீசி உடைத்துள்ளார். மனமுடைந்த பவித்ரா வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்தார். அவரை காப்பாற்ற மணிகண்டனும் குதித்தார். இரண்டு பேருக்குமே நீச்சல் தெரியாது. தனக்கு நீச்சல் தெரியாது என்று தெரிந்தும் மணிகண்டன் தன் தங்கையை எப்படி என்றாலும் காப்பாற்றி விடலாம் என்றே கிணற்றில் குதித்துள்ளார்.
ஆனால் அவர்கள் இருவருமே கிணற்றில் இறந்து போனார்கள். தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி இறந்த நிலையில், பவித்ரா, மணிகண்டன் இருவரையும் மீட்டனர். மண்டையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மோபைல் மோகம் என்பது எந்த அளவு சிறுவர் சிறுமியர்களை, அடிமையாக்கி வைத்திருக்கிறது என்று பார்த்தீர்களா ?