ஊழியர்களுக்கான போனஸ் கொடுப்பதை நிறுத்தவில்லை. ஆனால் இந்த மாதத்தில் அதை வழங்க முடியாது.
போனஸ் கொடுப்பது பற்றி ஒரு சிக்கல் உள்ளது. எனக்கு போனஸ் கொடுப்பதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் சட்டங்களும், நிதி விதிமுறைகளும் உள்ளன, அவற்றின்படி நாம் செயல்பட வேண்டும்.
இதற்காக கருவூலத்திடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். மேலும் அது அமைச்சரவைக்குச் செல்ல வேண்டும். இந்த நடைமுறைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
இந்த மாதத்திற்குள் இதை முடிக்க முடியாது. நிச்சயமாக போனஸ் கொடுப்பதை நிறுத்தவில்லை. ஆனால் இந்த மாதம் போனஸ் வழங்குவதற்கான வழி இல்லை. அதனால்தான் நான் ரூ.50,000 ஆண்டு போனஸாக உயர்த்தியுள்ளேன்.