எலான் மஸ்க் போட்ட ட்வீட்; கடுப்பில் உலக நாடுகள் !

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் பிற நாட்டவர்களை தேடிக் கண்டறிந்து அவர்களை நாடு கடத்த உத்தரவிட்டார். அதன் பேரில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாட்டினரும் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

இப்படி நாடுகடத்தப்படுபவர்களை அமெரிக்க அரசு கை மற்றும் கால்களில் விலங்கால் கட்டி அவர்களை வழியனுப்பி வைக்கிறது. இந்த விஷயம் கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் இருந்து பல எதிர்ப்பு குரல்களை சம்பாதித்து வைத்திருக்கிறது.

இந்நிலையில், சட்டவிரோதமாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை விலங்குடன் நாடு கடத்தும் புதிய விடியோவை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது மேலும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இந்த சர்ச்சையை இன்னும் பெரியதாக்கும் வகையில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “ ஹாஹா.. வாவ்” என்று பதிவிட்டுள்ளார். இத்துடன் ஏலியன் எமொஜி ஒன்றையும் இணைத்துள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் பிரபலங்களும் மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட வீடியோவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை ஏலியன் என்று குறிப்பிட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.