அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து எலான் மஸ்க்கும் அமெரிக்க அரசியல் சூழலில் முக்கியஸ்தராக மாறியிருக்கிறார். குறிப்பாக, அமெரிக்காவின் அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை, எலான் மஸ்க்கின் கீழ் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது உலகின் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.
எலான் மஸ்க்கும் மேம்பாட்டுத்துறை சார்பில் தன் பணியைத் தொடர்ந்தார். ஆனால், எலான் மஸ்க் செய்யும் செயல்கள் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என தகவல்கள் பரவ ஆரம்பித்தது. இதனால் அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஊழியர்களுக்கு இடையே சிறிய பதற்ற நிலைமையும் நீடித்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் அரசு நிர்வாக அலுவலக இயக்குனர் ஜோஷ்வா ஃபிஷர் இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் சேவை என்பது அமெரிக்க அதிபரின் நிர்வாக அலுவலகத்தின் ஒரு அங்கம். அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் தற்காலிக சேவை அமைப்பு, அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து செயல்படும். இரண்டும் வெள்ளை மாளிகை அலுவலகத்திலிருந்து தனித்தனியே உள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எலான் மஸ்க் வெள்ளை மாளிகை அலுவலகத்தின் ஊழியர் என்றும், அவர் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் ஊழியர் அல்ல.என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது