ஆஸ்திரேலியாவில் காதலனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய 57 வயது பெண், ஆன்லைன் மோசடி செய்பவர்களிடம் சுமார் 4.3 கோடி பணத்தை இழந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியை சேர்ந்த 57 வயதான அன்னெட் என்ற பெண்ணுக்கு 33 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இனிமையாக சென்ற அன்னெட்டின் திருமண வாழ்க்கை, 2018ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. கணவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு தனிமையை உணர்ந்த அன்னெட் , டேட்டிங் தளமான ப்ளெண்டி ஆஃப் ஃபிஷில் சேர்ந்தார்.
வில்லியம் என்பவரிடம் டேட்டிங் தளத்தில் பழக்கம் ஏற்பட்டத்து. பல மாதங்கள் நம்பிக்கையை வளர்த்து பழகியுள்ளார் வில்லியம். அன்னிட்டை காதலிப்பதாக நடித்த வில்லியம், அவரிடம் படிப்படியாக பணத்தை கறக்க தொடங்கினார். சுமார் ரூ. 1.6 கோடி பணத்தை அன்னட் வில்லியமுக்கு அனுப்பியுள்ளார். எல்லாம் தொலைந்த பின்னர், ஏமாந்து நின்ற அன்னட், ஆஸ்திரேலிய காவல்துறையிடம் புகாரளித்தார்.
இதனிடையே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2022ம் ஆண்டு, ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த நெல்சன் என்பவர், எப்பிஐஇல் வேலை செய்வதாக கூறி அறிமுகம் ஆகியுள்ளார். நன்கு பழகிய பின்னர். பணம் அனுப்புமாறு நெல்சன் கேட்டுள்ளார். ஆரம்பத்தில் அதை நம்பி பணம் அனுப்ப மறுத்தார் அன்னெட்.. பின்னர் ஒரு பிட்காயின் ஏடிஎம்மில் நிதியை டெபாசிட் செய்தார். அதைவைத்து நெல்சன் மோசடி செய்து கிட்டத்தட்ட ரூ. 2.5 கோடி பறித்துள்ளார்.
அன்னெட், டேட்டிங் ஆப்பில் காதலை தேடி பணத்தை தொலைக்க வேண்டாம் என ஆஸ்திரேலியர்களை எச்சரித்து வருகிறார்.