சாயம் வெளுக்கிறது: அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் தடை போட்ட அனுரா அரசு !

வெளிநாடுகளில் செயல்பாட்டில் உள்ள 90% சத விகிதமான அமைப்புகளுக்கும் தடையை நீடித்துள்ளது அனுராவின் அரசு: இதில் யோசிக்க வேண்டிய விடையம் என்னவென்றால், “தலைமைச் செயலகம்” என்று செயல்படும் குழுவுக்கும் தடை. ஆனால் BTF மற்றும் GTF ஆகிய குழுவுக்கு தடை இல்லையாம். BTF மற்றும் GTF அரசு சார்ந்த குழு என்பது அம்பலமாகிறது.

இதில் TCC, TRO, தமிழ் இளையோர் அமைப்பு என்று பல தமிழ் செயப்பாட்டு அமைப்புகள் தடையை அனுரா அரசு நீடித்துள்ளது. ஒரு நல்லிணக்க அடிப்படையிலாவது, சில அமைப்புகளின் தடையை நீக்கி இருந்தால், பேச்சு வார்த்தை நடத்த இலகுவாக இருந்திருக்கும். ஆனால் அந்த முன்னெடுப்பை மேற்கொள்ள அனுரா விரும்பவில்லை.

இலங்கையில் பெரும்பாண்மை பலத்தோடு இருக்கும், அனுரா நினைத்திருந்தால் சில அமைப்புகளின் பெயரைவாவது தடைப் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கலாம். இதுபோக மேலும் 201 பேருக்கு இலங்கை வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இவர்கள் யார் யார் என்பது தொடர்பாக இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இந்தப் பெயர் பட்டியலை விரைவில் அதிர்வு இணையம் அரசிடம் இருந்து பெற்று வெளியிடும். வெளியான பட்டியல் கீழே இணைப்பு:

1. Liberation Tigers of Tamil Eelam (LTTE)
2. Tamil Rehabilitation Organization (TRO)
3. Tamil Coordinating Committee (TCC)
4. World Tamil Movement (WTM)
5. Transnational Government of Tamil Eelam (TGTE)
6. World Tamil Relief Fund (WTRF)
7. Headquarters Group (HQ Group)
8. National Thowheed Jama’ath (NTJ)
9. Jama’athe Milla’athe Ibrahim (JMI)
10. Willayath As Seylani (WAS)
11. National Council of Canadian Tamil (NCCT)
12. Tamil Youth Organization (TYO)
13. Darul Adhar Ath’thabawiyya
14. Sri Lanka Islamic Student Movement (S.L.I.S.M)
15. Save the Pearls

சிறப்பு பட்டியலான மேலும் 14 ஈழத் தமிழர்களை அனுரா அரசு தடைசெய்து பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

1.Nadaraja Sathyaseelan a.k.a Seel Maran
2.Kamalasinham Arunakulasinham a.k.a Kamal
3.Antonyrasa Antony Calistor a.k.a Parathan
4.Sivasubramaniyam Jeyaganesh a.k.a Ganesh, a.k.a Samraj
5.Ponnasami Paskaran a.k.a Jeyakaran
6.Velaudan Pradeepkumar a.k.a Kaleeban
7.Siwarasa Surendran a.k.a wadann
8.Sivagurunadan Murugadas a.k.a Kadirawan
9.Thirunilakandal Naguleshwaran a.k.a Pushpanadan
10.Maheshwaran Ravichandran a.k.a Mendis, a.k,a Thirukkumaran
11.Suresh Kumar Pradeepan
12Kandasamy Krishnamoorthi, a.k,a Moorthi
13.Jeewarathnam Jeewakumar, a.k.a Siranjeew Master
14.Tony Jihan Murugesapillai