இத்தாலிக்கு வரி ஏய்ப்பு புகாரைத் தீர்ப்பதற்காக340 மில்லியன் டாலர்கள் கொடுப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் – தொழில்நுட்ப உலகில் மிகவும் முக்கியமான அங்கத்தை வகிக்கும் மாபெரும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் மீது 2015-2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் முறையாக வரி செலுத்தத் தவறியதற்காக இத்தாலி தலைநகரான மிலன் நிர்வாகம் கூகுள் மீது வழக்கு போட்டது.
இதையடுத்து இது தொடர்பாக கூகுளிடமும் விளக்கம் கேட்கப் பட்டது. கூகுள் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டது. அதே நேரம், இந்த வரி ஏய்ப்பு விசாரணையைத் தீர்ப்பதற்காக 326 மில்லியன் யூரோ கொடுக்கவும் முன்வந்துள்ளது.
இதை ஏற்றுக்கொண்ட மிலன் நகர நிர்வாகம், பணத்தை ஏற்றுக்கொண்டு இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. முன்னதாக, வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரான்ஸில் 1 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை கூகுள் அபரதமாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.