இலங்கை ராணுவத்தில் இருந்து, ஆயுதங்களோடு தப்பியோடிய நபர்களே தற்போது பாதாள் உலகக் கோஷ்டியோடு இணைந்து, பெரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் ராணுவத்தை விட்டு தப்பியோடிய நபர்களின் பட்டியலை எடுத்து, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என பெரும் விசாரணைகளை இலங்கை அரசு முடிக்கி விட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், அதற்கு பாவிக்கப்படும் ஆயுதங்கள் என்பன தொடர்பாக பெரும் அதிர்ச்சியான பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் பின்னணியில் பெரும் புள்ளி ஒருவர் இருப்பதாகவும் அனுரா அரசு சந்தேகம் கொண்டுள்ளது.
காரணம் அனுரா அரசுக்கு அவகீர்த்தியை ஏற்படுத்த இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
இதனை முன் நாள் அரசியல்வாதிகள், அல்லது முன் நாள் பாதுகாப்பு அமைச்சில் இருந்தவர்கள் இயக்க கூடும் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அனுரா அரசு பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே இந்த திரைமறை அரசியல்வாதிகளின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.