சில நிமிடம் இறந்து பின்னர் உயிர்த்தவர் சொன்ன விடையம்: தண்ணீர் போன்ற ஒரு வட்டப் பாதை தெரிந்தது…

“ஜேம்ஸ் நீ மூச்சை எடு… மூச்சை ….சுவாசி”  என்று என்னை சுற்றியுள்ள தாதிமார், சொல்வது மட்டும் என் காதுகளில் கேட்டது.  அடுத்த கணமே என் அப்பா அம்மாவைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன். ஆனால் சில நொடிகளில் கேட்ப்பது எல்லாமே நின்றுவிட்டது.  ஆனால் அதன் பின்னர், நின்மிகவும் குளிராக இருப்பதை உணர்ந்தேன், ஒரு தண்ணீரைப் போன்ற திரவத்தினால் ஆன, வெள்ளை வளையம் ஒன்று எனக்கு முன்னே தெரிந்தது.

அது ஒரு பாதை என்பது எனக்கு நிச்சயம் தெரியும். அதனுள் நான் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்கப்பட்டுக் கொண்டு இருந்தேன் என்று தெரிவித்தார். செத்துப் பிழைத்த ஜேம்ஸ் என்பவர். இது போன்ற அனுபவம் உள்ள மனிதர்கள் உலகில் மிக மிகச் சொற்பமானவர்களே உள்ளார்கள். ஆனால் அவர்களிடம் கேட்டால், சொல்லி வைத்தது போல ஒரே விடையத்தை தான் சொல்கிறார்கள். சாகும் தறுவாயில் பலர் தனது அப்பா அம்மாவை நினைப்பது உண்டு.

மேலும் வெள்ளை நிற வளையம் தோன்றியதாக சிலர் தெரிவித்துள்ளார்கள். அதுபோலவே ஜேம்ஸ்சும் தெரிவித்துள்ளார். ஜேம்ஸின் பித்தப் பையை அகற்ற, அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 20 நிமிடத்தில் முடியவேண்டிய சத்திர சிகிச்சை சற்று தாமதம் ஆகியது. சத்திர சிகிச்சை நடந்து முடிந்தவேளை. திடீரென ஜேம்ஸ்சின் , இதயத் துடிப்பு குறைய ஆரம்பித்துள்ளது. மருத்துவர்கள் அவர் உயிரைக் காப்பாற்ற போராடியுள்ளார்கள்.

ஒரு கட்டத்தில் இதயம் துடிப்பது நின்று, பின்னர் சில நொடிகளில் அவர் இதயம் மீண்டும் இயங்க ஆரம்பித்து விட்டது. அந்த இடைப்பட்ட நேரத்தில் தான், .. எதனைப் பார்த்தேன் என்று ஜேம்ஸ் தெளிவாக கூறி உள்ளார். தான் கடவுகளைப் பார்கவில்லை என்றும். ஒரு வளையத்தினுள் ஈர்கப்பட்டேன் என்றும். அதனூடாக பயணிக்கப் போகிறேன் என்பது மட்டும் தனக்கு தெளிவாகத் தெரிந்தது என்று ஜேம்ஸ் கூறியுள்ளார்.