இலங்கை மின்சார சபை (CEB) நாட்டெங்கும் உள்ள மாடிச் சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் (Rooftop Solar Systems) வைத்திருக்கும் பயனாளர்களிடம், ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 21 வரை ஒவ்வொரு நாளும் காலை நேரத்திலிருந்து பிற்பகல் 3.00 மணி வரை தங்களின் சோலார் அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துமாறு (switch off செய்ய) கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வேண்டுகோள், தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்ட காலத்தில் நாட்டின் மின் தேவையானது குறைவாக இருப்பதால், தேசிய மின்சார வலையமைப்பை (national grid) சமநிலைப்படுத்தும் முயற்சியாக செய்யப்பட்டுள்ளது.
CEB இதை மக்கள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.