காலி மாவட்டத்தில் மாப்பலகம குடமலான தோட்டத்தில், தோட்ட முகாமையாளரை ஒரு சக்கையில் கட்டிவைத்து தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பழமை வாய்ந்த தேயிலை தொழிற்சாலைக்குள் கொண்டு சென்று முகாமையாளரை தீயிட்டுக் கொளுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூச்சலிட்ட முகாமையாளரை தோட்ட தொழிலாளர்கள் தீயிலிருந்து மீட்டுள்ளனர். பின்னர், தீக்காயமடைந்த அவரை எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ வைத்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.