தேசிய தலைவரே அழைத்து தன் கையால் உணவு பரிமாறிய BBC ஆனந்தி அக்கா மறைந்தார் !

1940 களில் BBC தமிழ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது 1970களில் விரிவடைந்து , கண்டங்களைக் கடந்து தனது சேவைகளை விஸ்தரித்தது. அந்தக் காலத்தில் BBC தமிழோசையில் அறிவிப்பாளராக இருந்தவர் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள். அவரது பல செய்தி வாசிப்புகளை கேட்டு வளர்ந்தவர் தான் எமது, தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். அதனால் தலைவர் என்றும், ஆனந்தி அக்காமேல் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

அந்த வகையில், வெளிநாட்டு வானொலி என்ற ரீதியில் எமது தேசிய தலைவரை முதன் முதலாக பேட்டி எடுத்தவரும் BBC ஆனந்தி அக்கா தான். அவர் வன்னி சென்றவேளை, தேசிய தலைவர் அழைத்து, தன் கையால் ஆனாந்தி அக்காவுக்கு உணவு பரிமாறி இருந்தார். அந்தப் புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆனந்தி அக்கா படிப்படியாக வளர்ந்து, BBC தமிழோசையின் நிர்வாகியாகவும் பணியாற்றி இருந்தார்.

ஆங்கில தமிழ் ஊடகத் துறையில் பெரும் அனுபவம் மிக்க ஒரு ஜாம்பவானாக அவர் இருந்து வந்தார்.  ஊடகத் துறையை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதிலும் அவர் ஆர்வமாக இருந்தார்.  இதனால் “உலகத் தமிழ் ஊடகவியலாளர்”  சங்கத்தையும் ஆரம்பித்து தலைமை பொறுப்பில் இருந்தார். . இப்படி பல பொறுப்புகளில் இருந்து வந்த ஆனந்தி அக்கா, நேற்று இரவு(21) இயற்கை ஏய்தினார். அவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பதை பலர் அறிவார்கள்.

ஆனந்தி அக்காவின் இறுதிக் கிரிகைகள், 7 நாட்களின் பின்னரே அறிவிக்கப்படும் என்று உறவினர்கள் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்கள். ஆனந்தி அக்காவின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை பிரார்த்திப்போமாக. ஓம் ஷாந்தி ஷாந்தி …  மேலும் ஆனந்தி அக்கா பற்றி அறிய இங்கே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:  https://tamiljournalinfo.blogspot.com/