அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை, இந்தியாவிற்கு “வாக்காளர் வாக்குப்பதிவுக்காக” 21 மில்லியன் டாலர்களை வழங்குவதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்று கேட்டார்.
மேலும் அந்த நாடு “உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும்” என்றும் கூறினார். இந்தியாவுக்கு நாம் ஏன் ₹182 கோடி ($21M) தர வேண்டும். அவர்களிடம் நிறைய பணம் உள்ளது.
உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இறக்குமதி வரி அதிகமாக உள்ளதால், அமெரிக்க பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு சேர்க்கவே கடினமாக உள்ளது.
இந்தியா மீதும் பிரதமர் மோடி மீதும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா எதற்காக பணம் வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.