பார்வையாளர்களை முட்டாளாக்க முயற்சித்த சீன கிராமம்; கோபத்தில் பார்வையாளர்கள்!

Village known for scenic winter landscape apologises for cotton wool ‘snow’

சீனாவில் உள்ள சுற்றுலா கிராமம்தான் செங்க்டு. இதை பனி கிராமம் என்று அழைப்பார்கள். இந்த கிராமத்திற்கு ஜனவரி இறுதியில் பல சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த முறை இந்தக் கிராம்ம் சுற்றுலா பயணிகளிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இம்முறை இந்த “பனி கிராமம்”, பார்வையாளர்களிடம் இருந்து கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் வந்திருந்தபோது பனி பெரியளவு இல்லாத நிலையில்
வீட்டு குடிசைகள் மற்றும் பாதைகளில் பருத்தியைப் பயன்படுத்தி போலி பனியை கிராம நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இதை அங்கு வந்த பார்வையாளர்கள் கண்டறிந்தார்கள். இதனால் பனி கிராமம் குறித்து கடும் விமர்சனங்களை சமூகவலை தளங்களில் வைத்து வந்தார்கள்.

இதையடுத்து, பனி கிராம நிர்வாகம், போலி பனி ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்டது. மேலும், அதை அகற்றவுதாகவும் உறுதி அளித்தது. அத்துடன்,
பனி கிராமம் மன்னிப்பு கேட்டு, பார்வையாளர்களுக்கு பணத்தை திரும்பத் தருவதாகவும் அறிவித்தது. இந்நிலையில், தற்போது இந்த தளம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் பெய்த பனி இந்த ஆண்டு பனி கிராமத்தில் பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சோர்ஸ் – https://www.independent.co.uk/asia/china/chengdu-village-fake-cotton-snow-apology-b2699941.html