போதை பொருள் பாவித்ததை மறைத்தாரா இளவரசர் ஹரி: நிச்சயம் தண்டிப்பேன் என்கிறார் ரம் !

அமெரிக்காவில் குடியேற விசா விண்ணப்பிக்கும் போது, முக்கியமாக கேட்கப்படும் ஒரு விடையம் ” நீங்கள் போதைப் பொருள் பாவித்தீர்களா என்பது” அதற்கான சரியான விளக்கத்தை அன் நபர் கொடுக்க வேண்டும். பொய் சொன்னால் அது பெரும் குற்றமாக கருதப்படுகிறது. ஏன் எனில் சில வேளைகளில் , ரத்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது. அவ்வாறு இளவரசர் ஹரிக்கு நடந்துள்ளது.

அவர் தான் போதைப் பொருட்களை பாவிக்கவில்லை என்று தனது விண்ணப்பத்தில் கூறியுள்ளார். ஆனால் அவரிடம் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் முன்னர் பாவித்து உள்ளார் என்று கண்டு பிடிக்கப்பட்டால், பெரும் சிக்கலில் ஹரி மாட்டிக் கொள்வார். அப்படி நடந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன் என்று, ரம் தனது நெருங்கிய வட்டார நபர்களிடம் கூறியுள்ளார்.

இந்தச் செய்தி கசிந்த நாள் முதல் இளவரசர் ஹரி மிகவும் கவலையாக உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் அவர் இளமைக் காலத்தில் லண்டனில் தங்கியிருந்த வேளை, ஒவ்வொரு வார விடுமுறைக்கும் பப் நைட் கிளம் என்று சென்று சரக்கடிப்பதும், போதைப் பொருள் பாவிப்பதையும் வழக்கமாக கொண்டு இருந்தார்.

எனவே இனி வரும் நாட்களில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். ஏற்கனவே அதிபர் ரம்புக்கு ஹரின் மனைவி மெகான் மார்களை பிடிக்காது. நேரடியாகவே மெகான் ஒரு விவகாரமான பெண் என அவர் மேடையில் தெரிவித்து இருந்தார். இந்த பிரச்சனை எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை !