சில மாதங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சி, முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இவர் செல் போனை கைப்பற்றிய பொலிசார் பதிவில் இருந்த சில உரையாடல்களை கேட்டுள்ளார்கள். சாட்டை துரைமுருகனும் லேசுப்பட்ட ஆள் கிடையாது. அவர் தான் சீமானுடன் பேசிய விடையங்களை கூட ரக்காட் செய்து வைத்துள்ளார். இது ஒரு நாள் உதவும் என்று. இதேவேளை நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற காளியம்மாளைப் பற்றி, படு கேவலமாக சீமான் பேசியது பதிவாகி இருந்தது.
இதனை பொலிசார் ஊடகங்களுக்கு கசிய விட்ட நிலையில். அந்த உரையாடல் தமிழக மக்களிடையே வைரலாக பரவி, பெண்கள் பலர் சீமானை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இன் நிலையில், இந்த ஆடியோ கசிந்ததற்கு திருச்சி எஸ்பி-யாக இருந்த வருண் குமார் தான் காரணம் என்று சீமான் குற்றம்சாட்டினார். இதன்பின் நாதக நிர்வாகிகள் வருண் குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே உள்ளிட்டோரை அவதூறாக விமர்சித்து சோஷியல் மீடியாவில் பதிவிட தொடங்கினர். இந்த விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டிய நிலையில், திருச்சி எஸ்பி வருண் குமார் தரப்பில் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள்.
இதனிடையே நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பிலேயே, மோதுவோம் என்றாகிவிட்டது.. மோதி பார்க்கலாம் என்று சவால் விடுத்தார். இந்த நிலையில் திருச்சி SP-யாக இருந்த IPS வருண் குமாருக்கு, தமிழக அரசு தரப்பில் DGP-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர் திருச்சி DGP-யாகவும், இவரின் மனைவி வந்திதா பாண்டே திண்டுக்கல் DIG-யாகவும் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது.
இந்த பதவி உயர்வு கிடைத்த வெறும் 10 நிமிடங்களில் எல்லா, நாம் தமிழர் கட்சியின் ஆட்கள் வருண் குமார் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக பதிவுகளை போட்டு மேலும் அவரை கேவலப்படுத்த முயன்றுள்ளார்கள். ஒரு பெண் பொலிஸ் அதிகாரி என்று கூடப் பாராமல் அவர்கள், வந்திதாவை மிகவும் கீழ் தரமாக சோஷல் மீடியாவில் எழுதி வருகிறார்கள்.
அதில், திரள்நிதி திருடன் எந்த அளவிற்கு சென்றுவிட்டான் என்று பாருங்கள் மக்களே.. பார்க்கவே பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி. ஒரு பாடல் வரி, “நான் உனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்.. சேர்ந்ததே நம் ஜீவனே” என்று பதிவிட்டுள்ளார், வருண் குமார். தனக்கு கிடைக்கும் பணத்தை சீமான் திரள்நிதி நிதி என்று கூறிவருகிறார். அதாவது மக்கள் திரண்டு அவர்களால் கொடுக்கப்படும் பணம் என்பது பொருள் ! அதில் அவர் நீலாங்கரையில் 8 கோடி மதிப்பிலான ஒரு வீட்டைக் கட்டி உள்ளதோடு, மேலும் பல சொத்துக்களை வாங்கியுள்ளார்.
ஆனால் இன்றுவரை திருச்சியோ இல்லையேல் ராமேஸ்வரத்தில் உள்ள இலங்கை அகதி முகாமுக்குச் சென்று அவர்களுக்கு ஒரு உதவியைக் கூட செய்யவில்லை. மறு புறத்தில் நடிகர் சூரியா, கார்த்தி மற்றும் அவரது அப்பா சிவகுமார் ஆகியோர் அடிக்கடி அங்கே சென்று, ஈழத் தமிழர் மாணவ மாணவியர்களுக்கு , படிப்பதற்கான உதவிகளைச் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் !