நேற்றுக் காலை நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு, அதன் பின்னர், மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம். இது இவ்வாறு இருக்க நாட்டில் கடந்த 60 நாட்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இது போல நடந்துள்ளது.
இதனால் மக்கள் அனுரா அரசின் மீது நம்பிக்கையை இழக்க ஆரம்பித்துள்ளார்கள். மகிந்த மற்றும் கோட்டபாய ஆட்சியில் இருக்கும் போது இப்படி நடக்கவில்லை என்கிறார்கள் மக்கள். ஏன் அனுரா ஆட்சிக்கு வந்த பின்னர் இத்தனை துப்பாக்கிச் சூடு சம்பவம் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் சட்டம் சீர் குலைந்துள்ளதா ?
இல்லை எதிர்கட்சிகள் சதியா ? இல்லை பொலிசாரின் அசமந்தப் போக்கா ? என்பது தெரியவில்லை. ஆனால் இலங்கையில் உள்ள மக்கள் மெல்ல மெல்ல அனுரா மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்க ஆரம்பித்துள்ளனர் என்பது மட்டும் புரிகிறது.
மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அப்பா மகன் மற்றும் மகள் என மூன்று பேரும் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.