ராணுவத்தோடு சிரித்து பேசிய கொலையாளி: அந்த 2 சிப்பாய்களையும் அலேக்காக தூக்கிய புலனாய்வு

சமீபத்தில் நீதிமன்றில் வைத்து, பிரபல கஞ்சா கடத்தல் மன்னன், கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்தார் மொகமெட் என்ற மாறுவேடம் கொண்ட ஒரு சிங்களவர். அவர் உண்மையான பெயரைக் கூட இன்றுவரை, புலனாய்வுப் பிரிவினரால் கண்டு பிடிக்க முடியவில்லை. காரணம் அவர் 3 பெர்யர்களில் பதிவாகி உள்ளார்.

இது இவ்வாறு இருக்க அவரை புத்தளம் அருகே கைதுசெய்த வேளை, அவர் முகத்தில் எந்த ஒரு அச்சமும் தெரியவில்லை. மாறாக அந்த 2 ராணுவ சிப்பாய்களும் அவர் தொடையில் கை வைத்து சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் ஒரு GAY தொடர்பு இருப்பது போலவே அந்த சீன் இருந்தது.

இதனால் பாராளுமன்றில் எதிர்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு கிழி கிழி என்று கிழிக்க… என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய பாதுகாப்பு அமைச்சு, அந்த 2 ராணுவச் சிப்பாய்களையும் கைது செய்து, ஏன் ஒரு நண்பர் போல நீங்கள் அவரோடு பழகினீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களை துளைத்து வருகிறார்கள்.

வெறும் 15 லட்சம் ரூபாய்க்கு, மொகமெட் என்ற இந்தக் கொலையாளி, இந்தக் கொலையை செய்தாக அரசு கூறுகிறது. கொலை செய்ய வந்த மொகமெட் தன்னை ஏன் உரு மறைப்பு செய்யவில்லை ? கொலை செய்து விட்டு அவர் ஏன், ஒளிந்து கொள்ளாமல் வாகனத்தில் பயணிக்க வேண்டும் ? அவர் பயணிப்பதை யார் காட்டிக் கொடுத்தார் ? இவை எல்லாமே ஒன்றுக்கு ஒன்று முரணாகவே உள்ளது ?

ஒன்றுமே சரியாகப் பொருந்தவும் இல்லை. ஒரு கொலையாளி திட்டமிட்டு கொலை செய்தது போலவும் இல்லை. இதில் பெரும் சந்தேகங்கள் உள்ளது. இவை எல்லாமே மில்லியன் டலார் கேள்விகள் தான் போங்கள் !