வெறும் 14 வயதே ஆகும் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து 3 நாள்கள் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர், சிறுமியை ஏமாற்றிய காதலன் இருவரையும் போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். நடந்ததைக் கேட்டால் ஈரக் குலையே நடுங்கும் !
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு ஒரு இளைஞருடன் 14 வயது சிறுமி ஒருவர் அழுதுகொண்டு நின்றார். இதைக் கவனித்த அப்பகுதி மக்கள், சிறுமி ஏதோ பிரச்சினையில் சிக்கியிருக்கிறார் என உணர்ந்து, ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து சிறுமி மற்றும் இளைஞரிடம் விசாரணை நடத்தினர். இளைஞர் முரண்பாடான பதில்களை அளித்தார். உடனே ரோந்து போலீசார் இருவரையும் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து மேலும் விசாரணை நடத்திய போது, அந்த சிறுமி சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், “மாயமானவர்” என்று அழைக்கப்படுபவர் என்பதும் தெரியவந்தது. மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாயின. இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது: சின்னக்கோட்டைகாடு கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (24) என்பவர் ஒரு கூலித் தொழிலாளி. இவர் சென்னையில் வேலை செய்துவந்தவர். அதே பகுதியைச் சேர்ந்த இந்த 14 வயது சிறுமியை காதலித்ததாக தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகதீஸ்வரன், சென்னையிலிருந்து தனது ஊருக்கு வந்துவிட்டார். இந்த நிலையில், சிறுமி ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்த போது, தஞ்சாவூருக்கு வர சொல்லியுள்ளார். காதலன் அழைத்த நம்பிக்கையில் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, கடந்த 13ம் தேதி, சிறுமி தஞ்சாவூருக்கு வந்து ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போனை கட் செய்து விட்டார்.
நேரம் கடந்து போனாலும், ஜெகதீஸ்வரன் தனது காதலியான சிறுமியுடன் மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. சிறுமி போன் செய்தாலும், அவர் அதை ஏற்கவில்லை. “புது ஊருக்குச் சென்று என்னை நம்பி விட்டுச் சென்ற காதலன் இப்படி செய்துவிட்டாரே” என்று கலங்கிய சிறுமி, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் புதிய பேருந்து நிலையத்தில் அழுதுகொண்டு நின்றார். அப்போது, அங்கு வந்த அன்னை சத்யா நகரைச் சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் புவனேஸ்வரன் (30) சிறுமியிடம் விசாரித்தார். சிறுமியும், நடந்தவற்றை புவனேஸ்வரனிடம் விவரித்து அழுதார்.
“எதற்கும் கவலைப்படாதே, உன்னை உன் காதலனுடன் சேர்ப்பது என் பொறுப்பு” என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் சிறுமியை நம்ப வைத்தார் புவனேஸ்வரன். பின்னர், அவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவரது மனைவி வீட்டில் இல்லாததால், முன்னேறத் திட்டமிட்டு சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார். மேலும், மூன்று நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து, தொடர்ந்து பாலியல் வதை செய்தார். பின்னர், சென்னைக்கு பேருந்தில் ஏற்றி அனுப்புவதாகச் சொல்லி, புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த போது, போலீசாரிடம் சிக்கிவிட்டார். எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தீகளா ? இந்த உலகத்தில் எவருமே பாதுகாப்பாக இல்லை.