அலுத்கடே நீதிமன்ற வளாகத்தில் உள்ள 05 ஆம் எண் நீதிமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட “கணேமுல்ல சஞ்சீவ” என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல் மற்றும் குண்டர் தலைவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பூசா சிறையில் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த “கணேமுல்ல சஞ்சீவ”, இன்று காலை (19) நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் வகை துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக எமது நிருபர் தெரிவித்துள்ளார். இது போக வழக்கறிஞர் போல வேடமிட்டு வந்த நபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இலங்கையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம். இவை அனைத்துமே பாதாள உலகக் கோஷ்டியினரால் நடத்தப்பட்டு வருகிறது.