பத்தளந்த சித்திரவதை அறிக்கை தூசி தட்டி எடுக்கப்பட்டது! ஜனாதிபதி அதிரடி உத்தரவு !

இருபது ஆண்டுகளுக்கு மேலாக புதைக்கப்பட்டிருந்த பத்தளந்த சித்திரவதை அறிக்கை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது! பத்தளந்த வீட்டு வளாகத்தில் சட்டவிரோத தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை கூடங்கள் அமைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த இந்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை, ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கவின் அதிரடி உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலகத்தால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தற்போது தீவிரமான கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில் சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான முதல் அதிகாரப்பூர்வ நடவடிக்கை இதுவாகும். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த அறிக்கை மீது எடுக்கப்படும் இந்த அதிரடி நடவடிக்கை பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.