கொழும்பு ரஷ்ய தூதரக வெடிகுண்டு விவகாரம்: LAP-TOP பாஸ்வேட்டை தர மறுக்கும் ஜேர்மன் பெண் !

கடந்த ஏப்பிரல் 28ம் திகதி, கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள், கொழும்பு பொலிசாரை தொடர்புகொண்டு வெடிகுண்டு அச்சம் இருப்பதாக தெரிவிக்க. அங்கே பொலிசார் மோப்ப நாய்கள் குவிக்கப்பட்டது. ராணுவத்தினரும் உதவிக்கு விரைந்தார்கள். ரஷ்ய தூதரகத்தில் விட்டுச் செல்லப்பட்ட லாப்-டொப்பே இதற்கு காரணம்.

அதில் வெடி குண்டு இருக்கலாம் என்று ரஷ்ய அதிகாரிகள் சந்தேகம் அடைந்ததால் இந்த பரபரப்பு ஏற்பட்டது. குறித்த லாப்-டொப் ஒரு ஜேர்மன் பிரஜையுடையது என்பது சினமன் கார்டன் பொலிசார் கண்டறிந்து அந்தப் பெண்ணை நேற்று கைது செய்து சுமார் 5 மணி நேரம் விசாரித்துள்ளார்கள். ஆங்கிலத்தில் அந்தப் பெண் பேச மறுத்த காரணத்தால். ஜேர்மன் பாஷை தெரிந்த நபரை அழைத்து வந்து விசாரணை செய்யவேண்டிய நிலைக்கு பொலிசார் தள்ளப்பட்டதோடு.

எவ்வளவு கேட்டும் அவர் லாப்-டொப்பின் பாஸ்வேட்டை தர மறுத்துவிட்டார். மேலும் தொடர்ந்து வெளிநாட்டு பிரஜை ஒருவரை கைது செய்து வத்திருக்க முடியாது. இதனால் பொலிசார் அவரை விடுவித்துள்ள நிலையில், அந்த லப்-டொப்பில் என்ன இருக்கிறது என்று ஆராய முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.

குறித்த ஜேர்மன் பிரஜை , ஏதாவது ஒரு நாட்டு உளவாளியாக இருக்க சந்தர்பம் உள்ளது என்ற கோண்டத்தில் பொலிசார் விசாரணைகளை தொடர்ந்து நடத்த உள்ளதாக அதிர்வு இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.