வெலிமடை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: மாணவர்கள் உட்பட பலர் காயம்!

வெலிமடை, தயரபா பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களின் நிலை குறித்து மேலும் தகவல்கள் வெளியாகவில்லை.