ரஷ்யா மீண்டும் G7 கூட்டமைப்பில் சேருவதற்கு கனடா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார். தற்போது G7 அமைப்பின் தலைவராக இருக்கும் கனடா, அந்தக் குழுவின் “உறுப்பினர் மாற்றத்திற்கு தயாராக இல்லை” என்று நாடல்கா சிமோக் கூறினார்.
ரஷ்யாவை மீண்டும் G7 இல் சேர்க்க விரும்புவதாகவும், 2014 இல் அந்நாடு நீக்கப்பட்டது ஒரு “தவறு” என்றும் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் கூறியதைத் தொடர்ந்து சிமோக் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கான ஆதரவை G7 வலுப்படுத்த வேண்டும் என்றும், ரஷ்யா மீதான ராஜதந்திர, நிதி மற்றும் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் சிமோக் கூறினார்.