இலங்கை 2025ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் பற்றாக்குறை ரூ. 2,200 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7% ஆகும்.
அரசாங்கத்தின் மொத்த செலவு ரூ. 7,190 பில்லியனாக (GDP இல் 21.8%) மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் ரூ. 4,990 பில்லியனை (GDP இல் 15.09%) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு 79வது பட்ஜெட்டில், மானியங்கள் மற்றும் சம்பளப் பணம் உட்பட, தொடர் செலவுகளுக்கு அரசாங்கம் ரூ. 5,886 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இதில், சம்பளம் மற்றும் ஊதியங்களுக்கு ரூ. 1,230 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மானியங்கள் மற்றும் பரிமாற்றங்களுக்கு ரூ. 1,290 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் மொத்த வருமானத்தை விட, செலவு அதிகம் உள்ள பட்ஜெட்டையே அனுராவின் அரசும் போட்டுள்ளது. இதனை இலங்கை எப்படி ஈடு செய்யப் போகிறது என்பது பெரும் சவாலான விடையம். உற்பத்தியை கூட்டியே ஆகவேண்டும். உதாரணமாக இலங்கை கடல் சூழ்ந்த ஒரு நாடு. ஆனால் இலங்கை அரசு, உப்பை கூட இறக்குமதி செய்கிறது. இது தான் வேடிக்கையான விடையம்.
உள்நாட்டு உற்பத்தியை பெருக்காமல், எந்த ஒரு பட்ஜெட்டையும் போட்டு, வெற்றி காண முடியாது.