Toronto விமான நிலையத்தில் டெல்டா விமானம் விபத்து: 80 பேருடன் தரை இறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்தது:
டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் DELTA AIRLINE விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. CTV நியூஸின்படி, விமானம் 4819 தரை இறங்கும் போது குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர். கனடிய ஊடகத்தின்படி, ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெரியவர்கள் – 60களில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் – ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த ஆபத்தான சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் திங்களன்று பிற்பகல் டொராண்டோவில் காற்று மிகவும் அதிகமாக இருந்தது. விமான ஆர்வலர்கள் ஒரு செய்தி பலகையில், ஜெட் விமானம் பலத்த குறுக்கு காற்றினால் திருப்பி விடப்பட்டிருக்கலாம் என்று ஊகித்தனர்.
CR900 ரக விமானம், எண்டெவர் ஏர் என்ற பிராந்திய விமான நிறுவனத்தால் இயக்கப்பட்டது. அதில் சுமார் 80 பயணிகள் இருந்தனர். “மின்னியாபோலிஸ்/செயின்ட் பால் விமான நிலையத்திலிருந்து, டொராண்டோ-பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், May-Day …May Day… அறிவித்து இருந்தார்கள்.
விபத்து காரணமாக டொராண்டோ விமான நிலையத்தில் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
கீழே வீடியோ இணைப்பு: