Donald Trump ‘has given Putin the green light’ : ரஷ்யா லண்டனை தாக்கினாலும் நாங்கள் எதுவும் செய்யமாட்டோம்: டொனால் ரம் !

ரஷ்யா லண்டனை தாக்கினால் கூட, அமெரிக்க எந்த ஒரு நடவடிக்கையிலும் இறங்கப் போவது இல்லை, என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். அப்படியான ஒரு நிலையில் தான் அமெரிக்க அதிபர் ரம் உள்ளார் என்று, அந்த வெள்ளை மாளிகை அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக, இங்கிலாந்து மட்டும் ஐரோப்பிய யூனியன் நாடுகள், முழு அளவில் அமெரிக்காவுடன் இணைந்து பாதுகாப்பில் பெரும் பங்காற்றி வருகிறது. ஆனால் அந்த நாடுகளை எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் ரம், வெறுப்படைய வைத்துள்ளார் என்பதே உண்மை நிலை.

ரஷ்யா ஐரோப்பிய நாடுகளை தாக்கினால், அமெரிக்கா எதுவும் செய்ய மாட்டாது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது போக அமெரிக்காவில் டொனால் ரம்புக்கு இருந்து வந்த ஆதரவு சரியத் தொடங்கியுள்ளது என்ற புள்ளி விபரங்களும் வெளியாகத் தொடங்கியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடுமில் புட்டினோடு, டொனால் ரம்புக்கு நெருக்கமான ஒரு பிணைப்பு இருக்கிறது என்று பல வருடங்களுக்கு முன்னரே அமெரிக்க நிபுணர்கள் கருத்து வெளியிட்டு வந்தார்கள். அவர்கள் அன்றைய தினம் தெரிவித்த கருத்துகள் உண்மையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Source :  Mirror