முனிச் நகரில் இடம்பெற்ற மாநாட்டில், அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் கலந்து கொண்டு உரையாற்றி இருந்தார். இந்த உரையைல் தான் தற்போது பெரும் சிக்கலே தோன்றியுள்ளது.. மேலும் சொல்லப் போனால், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக ஐரோப்பிய நாடுகளுக்கு சொல்லி உள்ளது என்பது புரிகிறது. ஐரோப்பிய நாடுகளை ஒரு நொடியில், அமெரிக்கா கை விட்டுள்ளதாக தலைவர்கள் உணர்கிறார்கள்.
இதனால் அனைத்து ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களும் நேற்று(திங்கள்) கூடி, அமெரிக்கா விடுக்கும் சவாலை எப்படி சமாளிப்பது என்று ஆராய்ந்துள்ளார்கள். பிரித்தானியா ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறி விட்டது. இதனால் ஏனைய ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியா மீது கடும் கோபத்தில் இருந்தது. ஆனால் தற்போது தோன்றியுள்ள அவசர நிலையால், பிரித்தானியாவை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அன்புக் கரம் நீட்டி வரவேற்றுள்ளார்கள்.
நடந்த முனிச் மாநாட்டில், அமெரிக்க துணை ஜனாதிபதி அடுக்கடுக்காக ஐரோப்பிய தலைவர்கள் மேல் பழியை போட்டுக்கொண்டு செல்ல… என்ன செய்வது என்று, திக்குத் தெரியாமல் திணறிக்கொண்டு இருந்தார்கள் தலைவர்கள். இதில் பிரித்தானிய பிரதமர் மட்டுமே, சற்று துணிந்து. தான் தனது படைகளை அமைதி காக்க , உக்ரைனுக்கு அனுப்ப முடியும் என்று கியர் ஸ்டாமர் தெரிவித்தார். இதனைக் கூட அமெரிக்கா விரும்பவில்லை. ஏனைய நாட்டுத் தலைவர்கள் வாய் அடைத்துப் போய் உட்கார்ந்து இருந்தார்கள்.
தற்போது அதிபர் டொனால் ரம்பின் திட்டம் என்னவென்றால். தனது நண்பரான புட்டின் எப்படி என்றாலும் அமெரிக்காவை தாக்கப் போவது இல்லை. ஆனால் புட்டின் உக்ரைனை தாக்கியது போல போலந்தை அல்லது லித்துவேனியாவை தாக்க கூடும். அப்படி நடந்தால், அது ஐரோப்பிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். எனவே அது ஐரோப்பாவின் பிரச்சனை. அதற்கும் அமெரிக்காவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி என்றால் நாங்கள் ஏன் பணத்தை பில்லியன் கணக்கில் செலவு செய்து, பெரும் படையை , போலந்தில் நிலை நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்பதே டொனால் ரம்பின் கேள்வி.
இதேவேளை பலட்டிக் கடலில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க துறுப்புகள் மற்றும், விமானப்படை, ரஷ்யா ஐரோப்பா மீது படை எடுப்பதை தடுத்து வருகிறது. பெரும் அரணாக நிற்கிறது. போற போக்கில் அமெரிக்கா அந்தப் படையையும் வாபஸ் வாங்கினால், ஐரோப்பிய நாடுகளின் நிலை, அதோ கதியாகத் தான் இருக்கும். இதனால் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இணைந்து, ஒரு தனிப் படையை அமைத்து, தமக்கு தேவையான பாதுகாப்பை தாமே தேடிக்கொள்வது என்ற நிலைப்பாட்டை எட்டியுள்ளார்கள்.
அமெரிக்காவை நம்பி இருப்பதால் தான் இன்று, தங்களுக்கு இந்த நிலை தோன்றியுள்ளது என்று அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் தற்போது கருதுகிறார்கள். இதில் ரம் 25% சத விகித வரியை புதிதாக அறிமுகம் செய்ய உள்ளார். இதனால் ஐரோப்பிய பொருட்களின் விலை, அமெரிக்காவில் கடுமையாக அதிகரிக்க உள்ளது. அங்கே ஐரோப்பிய பொருட்களை விற்க முடியாத நிலை தோன்றும்.
ஐரோப்பா, அதிபர் ரம் காலடியில் விழும். இந்த நிலையில் இருந்து ஐரோப்பிய நாடுகள் எப்படி தப்பி பிழைக்கப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.