முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

மட்ட்களப்பை பிரதிநிதித்துவ படுத்தி நாடாளுமன்றம் தெரிவான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வியாழேந்திரன்  கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில்  ஏப்ரல் முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர் தமிழ் ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்து பலகணக்கான குற்ற செயல்கள் மற்றும் கொலை வழக்குகளில் கூட இவர் சம்பந்தபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.