அந்நியனாக மாறி நாடாளுமன்றதில் நல்லவராக பேசிய ராஜபக்சவிண் வாரிசு!

முன்னாள் தலைமை நீதிபதி சிரானி பண்டாரநாயக்கவை பதவியில் இருந்து நீக்கிய மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் முடிவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார். தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் ஆளும் கட்சியின் முன்மொழிவு குறித்து பேசிய நாமல், முந்தைய அரசாங்கங்களின் தவறுகளை தற்போதைய அரசாங்கம் மீண்டும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார்.