ஹிப் ஹாப் தமிழாவின் “Return of Dragon” இலங்கை ஸ்பெஷல்! – 2 நாளில் ரெடியா?

பிரபல இசையமைப்பாளர், பாடகர் மற்றும் ராப் கலைஞர் ஹிப் ஹாப் தமிழா (Hip Hop Tamizha) தனது ரசிகர்களுக்காக ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். “Return of Dragon – Sri Lanka Edition” என பெயரிடப்பட்டுள்ள இந்த கச்சேரி இன்னும் 2 நாள்களில் மிகப் பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.

இலங்கையில் தமிழ் இசையைப் போற்றும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹிப் ஹாப் தமிழாவின் ஹிட் பாடல்களுடன், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி இது என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இது ஹிப் ஹாப் தமிழா இலங்கையில் நடத்தும் மிகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும். “கிளம்புங்க டா!”, “அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு”, “சென்னை சிட்டி காங்க்ஸ்டா”, “மீசையை முறுக்கு” உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்கள் நேரடியாக இசை மழை பெய்யும் சூழ்நிலை உருவாகும்.

இசை ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ஆர்வத்துடன் காத்திருக்க, இதன் டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. ஹிப் ஹாப் தமிழா ரசிகர்களுக்கு இது மறக்க முடியாத ஒரு இசை இரவாக இருக்கப் போகிறது!