நடிகை த்ரிஷா தனது சமூகவலைதளப் பக்கத்தில் அழகிய சேலையில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “காதல் எப்போதும் வெல்லும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் த்ரிஷா, கடந்த 20 ஆண்டுகளாக தனது இடத்தை மாறாமல் வைத்திருக்கிறார். மாடலிங் துறையில் அறிமுகமாகி பின்னர் சினிமாவில் கால்பதித்த அவர், எப்போதும் இளமையாக தோன்றும் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
அவர் நடித்த சமீபத்திய படங்களான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகியவை பெரிய வெற்றியைக் கண்டன. தற்போது, அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்.
41 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்துவமாக வாழும் த்ரிஷாவின் சமீபத்திய காதல் குறித்த பதிவு ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு, அதிக எண்ணிக்கையில் லைக்குகளை பெறுகின்றது.
View this post on Instagram