“வியாழக்கிழமை, செனட் சபை, காஷ் பட்டேலை FBI இன் புதிய இயக்குநராக வெறும் 51 வாக்குகளால் தெரிவு செய்துள்ளது. இதில் 49 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளார்கள். இது குறுகிய வாக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்தியது, கட்சிப் பிளவுகளை எதிரொளிக்கிறது. காஷ் பட்டேல் ஜனாதிபதி டொனால் ட் டிரம்பின் நலன் விரும்பி என்பதால், அவரை வைத்து அரசு பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கக் கூடும் என்பதே பெரும்பாலான செனட் உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது.
இலினொய் மாநில செனட்டர் டிக் டர்பின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, “இதை விட மோசமான தேர்வை என்னால் கற்பனை செய்ய முடியாது” என்று கூறினார், மேலும் பட்டேலின், டிரம்ப் மீதான விசுவாசம் மற்றும் FBI இன் நேர்மை குறித்து எழுந்த கவலைகளை வலியுறுத்தினார்.
இந்த நியமனம் FBI கடுமையான உள் சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் வந்துள்ளது, இதில் பல மூத்த அதிகாரிகளின் சமீபத்திய வெளியேறியுள்ளார்கள். மற்றும் ஜனவரி 6 கேபிடல் கலவரம் தொடர்பான விசாரணைகளில் இனி பல சாதகமான முடிவுகள் வரலாம் என்று கூட கூறப்படுகிறது. ஏன் எனில் கேபிடல் கலவரத்தின் பின்னணியில் ரம் தான் இருந்தார்.
டிரம்பின் வலுவான ஆதரவாளரான கேஷ் பட்டேல், FBI குறித்து தனது விமர்சனங்களை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார், மேலும் இப்போது அவர் அதன் தலைவர் ஆகியுள்ளதால் இனி என்ன எல்லாம் நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.