தொலைபேசியில் புட்டின் சொன்ன அனைத்து, நிபந்தனைகளையும் ரம் ஏற்றுக்கொண்டுள்ளார். பேச்சு வார்த்தை கிடையாது, ஐரோப்பிய நாடுகள் சம்பந்தப்படக் கூடாது, ஆனால் 3 வருடங்களுக்கு போரை நிறுத்தி வைக்கலாம். இதுவே ரஷ்யாவின் நிபந்தனை. இதனை தான் ரம் யுத்த நிறுத்தம் என்று அறிவித்துள்ளார் !
பாரிஸில் அவசர தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், உக்ரைனுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்பத் தயார் என்று ஐரோப்பிய தலைவர் ஒருவர் முதன்முறையாக அறிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உக்ரைன் அல்லது ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல், மூன்று ஆண்டு கால மோதலைத் தீர்ப்பது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிப்படுத்தினார் என டொனால் ரம் தெரிவித்துள்ள விடையம் பல உலகத் தலைவர்களை ஆச்சரியத்துக்கு ஆளாக்கியுள்ளது.
உக்ரைனுக்கான ட்ரம்பின் தூதர் கீத் கல்லாக், வரவிருக்கும் எந்தவொரு சமாதான பேச்சுவார்த்தையிலும் ஐரோப்பா சேர்க்கப்படாது என்று தெரிவித்தார். அதே நேரத்தில், உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு அவர்களின் சாத்தியமான பங்களிப்புகள் குறித்து விசாரிக்க அமெரிக்கா ஐரோப்பிய தலைநகரங்களைத் தொடர்பு கொண்டுள்ளது.
அடுத்த வாரம் வாஷிங்டனில் ட்ரம்பைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், ஐரோப்பாவுடன் அமெரிக்கா, நெருக்கமான ஒத்துழைப்பை பேண வேண்டும் என்று கியர் வலியுறுத்த உள்ளார்.