கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று (21) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 294.67 ரூபாயாகவும், விற்பனை விலை 303.32 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 294.38 ரூபாயாகவும், 303.03 ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று குறைந்துள்ளது. இந்த சரிவு நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
டொலருக்கு எதிராக இலங்கை ரூபா சரிவு! பொருளாதார நிபுணர்கள் கவலை!
