தமிழர் பகுதியில் செல்வாக்கை இழந்த JVP கட்சி- பாடம் புகட்டிய தமிழர்கள் !

இலங்கையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், JVP கட்சி சிறிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. கடந்த நவம்பர் நடைபெற்ற தேர்தலில் மக்கள் செலுத்திய வாக்குகளை விட சற்று குறைவான வாக்குகளையே அக் கட்சி பெற்றுள்ளது. இதில் ஆச்சரியமான விடையம் என்னவென்றால், இலங்கையில் வட கிழக்கில் வாழும் தமிழர்கள் மும் முறை சரியான ஒரு முடிவை எட்டியுள்ளார்கள் என்பது தான்.

தமது பிரதேச சபை உறுப்பினராக யாரை தெரிவு செய்யவேண்டும் என்பதில் தமிழர்கள் தரமான ஒரு முடிவை எடுத்து, சிங்கள கட்சியான JVPயை புறக்கணித்துள்ளார்கள் என்பது, உலகத் தமிழர்களுக்கு நிம்மதி தரும் செய்தியாக உள்ளது. இதேவேளை அனுரா சற்றும் இதனை எதிர்பார்கவில்லை என்று கூறப்படுகிறது.

இலங்கையில் 43% விகித ஆதரவைப் பெற்றுள்ளது அனுராவின் JVP கட்சி. தமிழர்களின் ஆதரவு இருந்திருந்தால், இம்முறை 52% விகித ஆதரவு கிடைத்திருக்கும். அனுராவின் கணக்குப்படி யாழில் JVP பிரதேச சபையைக் கைப்பற்றும் என்று எண்ணி இருந்தாராம். ஆனால் அது நடைபெறவில்லை. மேலும் சொல்லப் போனால்…

இலங்கையில் சஜித்தின் கட்சி கடந்த தேர்தலை விட அதிக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. இலங்கை வரை படத்தை பார்க்கும் போது, அதிக சிங்கள மக்கள் வாழும் இடங்கள் சிவப்பாகவும்(JVP) தமிழீழப் பிரதேசம் அப்படியே மிகத் தெளிவாகவும் காணப்படுகிறது. இலங்கை தமிழர்கள் JVPKகு ஒரு பாடத்தை புகட்டியுள்ளார்கள் என்று தான் கூறவேண்டும்.