புலிகள் மீண்டும் வருவார்கள்: சரத் பொன்சேகாவின் பெரும் கவலை இதுதான் !

மே 18 தினத்தை தமிழர்கள் துக்க தினமாக அறிவித்து நிகழ்வுகளை நடத்த. சிங்கள அரசு அதனை மாவீரர் தினமாக நடத்தி, தங்கள் நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்லியுள்ளார்கள். அதாவது அனுரா அரசு, தமிழர்களின் நண்பன் என்ற கபட நாடக கருத்துகள் மே 18 அண்று உடைந்து விட்டது என்று தான் கூறவேண்டும் ! இன்னும் சில தமிழர்கள் அனுராவுக்கு வால் பிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இது நன்றாகவே புரிந்து இருக்கும்.

இலங்கையில் மே 18 அன்று நடைபெற்ற சிங்கள மாவீரர் நாளில், அனுரா கலந்து கொண்டார். பெரும் எடுப்பிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சிவப்பு கம்பள வரவேற்ப்பு அனுராவுக்கு கொடுக்கப்பட்டது. இதேவேளை ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த முன் நாள் ராணுவத் தளபதி. மற்றும் இன் நாள் அரசியல்வாதி சரத் பொன்சேகா திடீரென அங்கே தோன்றியது பலரை வியப்பில் ஆழ்த்தி இருந்தது.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை ராணுவத்தை பலப்படுத்தவேண்டி உள்ளது என்றும். பல மாற்றங்களை கொண்டு வரவேண்டி உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் கிழக்கில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது மிகவும் ஆபத்தான வேலை என்றும். இலங்கை பாதுகாப்பாக இல்லை என்றும் தெரிவித்தார்.

என் நேரமானாலும், எந்த வடிவிலும் புலிகள் மீண்டு வருவார்கள் என்ற பெரும் அச்சம் அவர் மனதில் இன்னும் குடிகொண்டு உள்ளது என்பது, இவரது கருத்து மூலம் தெளிவாகப் புலப்படுகிறது. இலங்கையில் எந்த நேரமானாலும் ஒரு யுத்தம் தோன்றலாம், அதற்கு நாம் தான் தயாராக இருக்கவேண்டும் என்ற கருத்தில் அவர் பேசியுள்ள விடையம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.