திருடிய தங்கச் சங்கிலியை விழுங்கிய நபர் – மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவு!

ஹோமாகம பொலிஸாரால் தங்கச் சங்கிலி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில், சந்தேகநபரை விசாரித்த போது, அவர் வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பொலிஸார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அந்தப் பரிசோதனையின் மூலம், சந்தேகநபர் சங்கிலியை விழுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அதிகாரிகள் அவரிடமிருந்து சங்கிலியை மீட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.