ஜனாதிபதி நிதியிலிருந்து பெறப்பட்ட தொகைகள் தொடர்பான குற்றப்புலனாய்வு துறை (CID) நடத்திய தொடர்ச்சியான விசாரணையில், 2008 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் 22 முன்னாள் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பயனடைந்துள்ளனர் என தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இதனையடுத்து, குறித்த நிதி பரிவர்த்தனைகளின் செக் விவரங்களைப் பெறுவதற்காக, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திலிருந்து உத்தரவு பெறவும் CID நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.