இஸ்ரேலில் 3 பஸ் இரவு 9 மணிக்கு வெடித்து சிதறியுள்ளது. இவை அனைத்தும் பஸ் டிப்போவில் காலியாக இருந்தால், உயிர் சேதம் ஏற்படவில்லை என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பஸ்களில் பொருத்தப்பட்ட குண்டுகள் காலை 9 மணிக்கு வெடிக்கும் படி செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனை செய்தவர்கள் தடுமாற்றத்தில் மாலை 9 மணி என்று செட் செய்து விட்டார்கள்.
இதனால் 3 பஸ்கள் இரவு 9 மணிக்கு வெடித்து சிதறியுள்ளது. இதே பஸ் வண்டிகள் காலை 9 மணிக்கு வெடித்து இருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். இதேவேளை மேலும் சில பஸ்களில் இதே வெடிகுண்டுகள் காலை வெடிக்கும் படி செட் செய்யப்பட்டுள்ளதை அறிந்த இஸ்ரேல் படையினர், அதனை செயல் இழக்கச் செய்துள்ளார்கள்.
இது ஹமாஸ் இயக்கத்தின் வேலையாகத் தான் இருக்க வேண்டும் என்றும். தகுந்த பதிலடியை தாம் கொடுப்போம் என்றும் இஸ்ரேலிய படைகள் கூறியுள்ளார்கள்.