Pope in critical condition: போப் ஆண்டவர் நிலமை மோசம்- அனைவரும் பிரார்த்தனை !

88 வயதான போப் பிரான்சிஸ் இருமுறை நிமோனியா மற்றும் நாள்பட்ட பிராங்கைட்டிஸ் காரணமாக ஒரு வாரத்திற்கும் அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் “நீண்டகால சுவாச பிரச்சனை” காரணமாக மிகுந்த சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அதிக அளவில் ஆக்ஸிஜன் வழங்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. மேலும், அவர் நேற்று ஒப்பிடும்போது அதிகமான வலி அனுபவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சனி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “புனித தந்தையின் நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளது” என்று வத்திக்கான் தெரிவித்தது. இன்று காலை(23), அவர் கடுமையான ஆஸ்துமா தொடர்பான சுவாசப் பிரச்சனைக்குட்பட்டதாகவும், அதிக அழுத்தம் கொண்ட ஆக்ஸிஜன் வழங்க தேவையென்றும் கூறப்பட்டது.

மேலும், ரத்த பரிசோதனையில் அனீமியா தொடர்பான தொம்போசைட்டோபீனியா (ரத்த தகடிகள் குறைபாடு) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அவருக்கு ரத்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. “புனித தந்தை விழிப்புணர்வுடன் உள்ளார், ஆனால் நேற்று விட மிகவும் பாதிக்கப் பட்டுள்ளார். அவர் நாள் முழுவதும் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். தற்போதைக்கு மருத்துவ எதிர்பார்ப்பு கவனிக்கப்படவேண்டும்,” என வாடிகான் அறிவித்துள்ளது.

சனி காலை வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில், போப் பிரான்சிஸ் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக ஞாயிறு பிரார்த்தனைகளை நடத்த முடியாது என்றும், “போப் நன்றாக ஓய்வு எடுத்துள்ளார்” என்றும் தெரிவிக்கப்பட்டது. ஞாயிறு அன்று ஏஞ்சலஸ் பிரார்த்தனைக்காக, அவர் எழுதிய உரையை வேறு ஒருவர் வாசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கலாம்.