தன்னை எதிர்த்துப் பேசிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, அதிபர் டொனால் ரம் உக்ரைன் அதிபரை சர்வாதிகாரி என்று விமர்சனம் செய்துள்ளார். தனது ஆட்சிக் காலம் முடிந்த பின்னரும் உக்ரைன் அதிபர் ஆட்சியில் இருப்பதாகவும், அங்கே தேர்தல் நடைபெறவில்லை என்றும் மேலும் ராணுவ ஆட்சியே நடக்கிறது என்று அடுக்கடுக்காக குற்றங்களை சுமத்தியுள்ளார் ரம்.
ஆனால் உலகில் முதல் தடவையாக, பிரித்தானிய பிரதமர் அமெரிக்க அதிபர் ரம்புக்கு எதிராக சற்று முன்னர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதில் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், ஜனநாயக ரீதியில் உக்ரைன் அதிபர் தெரிவு செய்யப்பட்டார். அவரது ஆட்சிக் காலம், மே மாதம் 2024 முடிவடைந்தது. ஆனால் ரஷ்ய படையெடுப்பு நிகழ்ந்து கொண்டு இருந்தது. நாட்டை ரஷ்யப் படைகள் கைப்பற்ற இருந்தது. இந்த நிலையில் எப்படி தேர்தலை நடத்த முடியும் ?
பிரித்தானியாவாக இருந்தால், நானும் இந்த முடிவை தான் எடுத்து இருப்பேன், எனவே தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உக்ரைன் அதிபர் ஜிலன்ஸ்கியை நான் ஆதரிக்கிறேன் என்று பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது, நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போலவே நடந்துள்ளது.
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு அப்பு அடித்து பல நாட்கள் ஆகிறது. அமெரிக்கா அதிபர் ரஷ்ய அதிபர் புட்டினின் மிக நெருங்கிய நண்பர். இதனால் இனி நேட்டோ படையணியில் கூட பெரும் பிளவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகள் இணைந்து தமக்கான பாதுகாப்பை அமைப்பதே சிறந்த விடையம்.