ஹிக்கடுவவில் பயங்கர துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு!

ஹிக்கடுவா, கருவலகந்த பகுதியில் இன்று (3) மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார்.

குமார்கந்த பகுதியில் அமைந்துள்ள கடையில், கணவன்-மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் உடனடியாக கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு கடை உரிமையாளர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவரின் மனைவியும் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்த போது இருவரும் கடைக்குள் இருந்த நிலையில், மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் மாலை 7.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஹிக்கடுவா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.