தற்போதைய காலக்கட்டத்தில் இயற்கையான முறையில் கருத்தரிப்பதில் சிரமம் உள்ள தம்பதிகள் ‘இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன்’ எனப்படும் ஆய்வுக்கூட சோதனை முறையில் கருத்தரிக்கிறார்கள்.
இந்தச் சோதனை முறையில், இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் (ஐவிஎஃப்) என்னும் ஆய்வுக்கூட சோதனை முறையானது, ஆய்வகத்தில் முட்டை மற்றும் விந்தணுக்களை இணைத்து, பின்னர் அதனை பெண்கள் கருப்பையில் வைத்து, கருத்தரிக்க உதவும் இனப்பெருக்க நுட்பமாகும். ஆனால், இதற்கு அமெரிக்க அரசு சார்பில் பெரிய அளவில் ஆதரவு வழங்கப்படவில்லை.
இதையடுத்து, அமெரிக்க அரசு ஆய்வுக்கூட சோதனை கருத்தரிப்புக் குறித்து ஆய்வு செய்தது. அதன்படி, ஆண்டுக்கு ஆண்டு இந்த விகிதம் குறைந்துவருகிறது. இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்த போது,
அமெரிக்காவில் இந்தவகை சிகிச்சைக்காக ஒரு சுழற்சிக்கு 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டாலர்கள் செலவாகிறது என்றும் பல சுழற்சி சிகிச்சைக்குப் பிறகே கருத்தரித்தல் சாத்தியமாகும் என்பதால், மக்கள் அஞ்சுகிறார்கள் என்றும் தெரிய வந்தது.
இதன் பின்னர் இது குறித்து அமெரிக்க அரசு விவாதத்தில் அமர்ந்தது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் ஆய்வுக்கூட சோதனை முறை கருத்தரித்தல் விரிவாக்க உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம் ஆய்வுக்கூட சோதனை முறை போன்ற சிகிச்சையில் கொள்கை திட்டங்கள் வலுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.