முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் இருவர் கைது நடந்தது என்ன ?

“2008 மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2008 மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகள் நேற்று (01) நவகத்தேகம மற்றும் எலயாபத்துவா பொலிஸ் பிரிவுகளில் வைத்து இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

2008 மே 22 ஆம் தேதி, தெஹிவளை பொலிஸ் பிரிவின் வைத்தியா வீதி பகுதியில் வேனில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் (MIC) ஓய்வு பெற்ற இரண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகள், அவர்களின் வயது 42 மற்றும் 46, நவகத்தேகம மற்றும் உலுக்க்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.”