ஐ.நா சபையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு, எதிராக பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரித்து இருந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அங்கே டொனால் ரம் பதவியேற்றுள்ள நிலையில் அனைத்தும் தலை கீழாக மாறியுள்ளது.
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட அந்த பிரேரணையை அமெரிக்கா இனி ஆதரிக்காது என்று வெள்ளை மாளிகை நேற்று(20) அறிவித்துள்ளது. இதனால் ஐ.நாவில் கூட 2 பகுதியா பிழவு ஏற்பட்டுள்ளது. குறித்த பிரேரணையை ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் ஆதரித்து வருகிறது.
மேலும் உக்ரைன் அதிபர் ஸிலன்ஸ்கியோடு பேச்சு நடத்த, அமெரிக்க உயர்மட்ட ராஜதந்திரி ஒருவர் உக்ரைன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பார் என்றும். மேலும் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே எழுந்துள்ள மனக் கசப்பை குறைக்க பேச்ச நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.