அன்பான மக்களே!
இம்மாதம் எமது விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் மவுனிப்பும் எமது மக்கள் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை மூலம் கொல்லப்பட்டதுமான சொல்லில் அடங்காத துயரத்தின் “மே” மாதமாகும்
எமக்கானவர்கள் எம்மை விட்டு மறைந்த மாதமாகும்.
எல்லாம் முடிந்து விடவில்லை எமக்கான அரசியல் இன்னும் எமது கைகளிலே தான் இருக்கின்றது , வலி சுமந்த இதே மே மாதத்தில் தான் எமக்கான ஆட்சி உரிமையயை தீர்மானிக்கும் அரசியலும் தேர்தல் வடிவத்தில் வந்து நிற்கின்றது
எமது அரசியல் இருப்புக்கான அடி அத்திவாரமான உள்ளூராட்சி என்பது வெறுமனே வாக்குத் தேர்தல் அல்ல மாறாக ஒவ்வோரு தமிழ்க் குடும்பத்திற்கான வாழ்வாதார அரசியல் அதிகாரம் என்று தான் குறிப்பிட வேண்டும், எல்லாவற்றை இழந்து நிற்கின்ற நாம் எமது இறுதி அதிகாரத்தையும் சிங்களக் கட்சிகளிடம் விட்டுக் கொடுக்கமுடியாது
மே மாதம் ஒன்றில் தான் ஆயுதப்போராட்டத்தை இழந்தோம் விதி வலியது போல் இன்று அதே மே மாதம் எமக்கான இறுதி அரசியல் இருப்பை தக்க வைக்கும் உள்ளூராட்சி என்பது தேர்தல் வடிவத்தில் வந்து நிற்கின்றது
உணர்வு மிகுந்த பாசமிகு மக்களே!
இது தமிழ் தேசியக் கட்சிகளுக்கான பரீட்சைக் களம் அல்ல ,தேசியம் தன்னாட்சி விடுதலை என்பதை உணர்ந்து இந்த மண் எங்களின் சொந்த மண் என்கிற தமிழ்த் தேசிய உணர்வுடன் எமது உள்ளூராட்சி அதிகாரம் சிங்களவனின் கைகளிலும் ஓட்டுக்குழுக்களின் கைகளிலும் சிங்களத்தின் பின் கதவுக் கட்சிகளின் கைகளிலும் விழாதபடி தமிழ்த் தேசம் தேசியம் என்னும் கொள்கையில் உறுதியுடன் சைக்கிள் சின்னத்தில் வாக்கு கேட்டு நிற்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்கு வாக்களித்து இம் மே மாதத்தில் எமது மண்னை மீட்க தமிழ்த் தேசியப் பேரவைக்கு ஆதரவு தருவீர்கள் என்கிற நம்பிக்கையுடன்
பா .சந்திரன்
இயக்குநர்
ஒருங்கிணைப்பாளர்
தாயகம் திரும்பியோர் திரும்புவோருக்கான உரிமைகள் அமைப்பு
சென்னை
தமிழகம்