வெலிகடை காவல்நிலைய சர்ச்சை: இளைஞனின் உடலை மீட்க நீதிமன்றம் அதிர்ச்சி முடிவு!

வெலிகடா போலீஸ் நிலையக் காவலில் இருந்தபோது உயிரிழந்த இளைஞரின் உடலை தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் கொழும்பு பிரதான நீதிக்குறிய மருத்துவ அதிகாரிக்கு (JMO) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இளைஞரின் உடலை மூன்று நிபுணர் மருத்தவர்களால் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் மீண்டும் உடற்கூறு பரிசோதனை செய்யுமாறு, அதன் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆஜர்படுத்திய மனுவை பரிசீலித்த பிறகு, கொழும்பு கூடுதல் நீதவான் கெமிந்த பெரேரா அவர்களால் நேற்று (ஏப்ரல் 09) வழங்கப்பட்டது.

2025 ஏப்ரல் 02 ஆம் திகதி அதிகாலை, வெலிகடா போலீஸ் காவலில் இருந்தபோது இந்த இளைஞர் படுகாயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

பின்னர் அவரை அங்கொடையில் உள்ள தேசிய மனநல நிறுவகத்திற்கு அனுப்பினர். அங்கு அவரது உயிர் பறிபோனது.